மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 10–ந் தேதி
அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை செயல்படுத்த வேண்டுமென்றால் மாநில அரசு தனியாக உத்தரவை வெளியிட வேண்டும். இதையடுத்து அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டார்.
இந்த உத்தரவின்படி கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு பணத்தையும், ரொக்கமாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஐ.ஏ.எஸ் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கணக்காயர் அலுவலகம் மற்றும் தமிழக கருவூலத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் அரசுத்துறை ஊழியர்கள், அலுவகங்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.