என்ஜினீயரிங் படிப்பில் சேர கடந்த 6-ந்தேதி முதல் விண்ணப்பங்கள்
கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல, மருத்துவ படிப்பில் சேர வருகிற 11-ந்தேதி விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படுகிறது. சட்டக்கல்லூரியில் சேர
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு
மருத்துவ படிப்புக்கு தேவையான உயிரியல் பாடத்தில் குறைந்த எண்ணிக்கையிலே மாணவ-மாணவிகள் 200-க்கு 200
எடுத்துள்ளனர். கடந்தாண்டு உயிரியல் தேர்வில் 652 பேர் 200-க்கு 200 எடுத்திருந்தனர். ஆனால் இந்தாண்டு 387 பேர்
மட்டுமே 200-க்கு 200 எடுத்துள்ளனர். அதேபோல, வேதியியல் தேர்வில் இந்தாண்டு 1,049 பேர் 200-க்கு 200 எடுத்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு 1,693 பேர் 200-க்கு 200 எடுத்திருந்தனர். எனவே மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‘கட்-ஆப்’
மார்க் கடந்த ஆண்டை விட 0.5 குறைய வாய்ப்புள்ளது.
என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு கணிதம், இயற்பியல்,
வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் தேவை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 மார்க்
எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், கணித தேர்வில் 9,710 பேர் 200-க்கு 200 எடுத்துள்ளனர். ஆனால்
கடந்த ஆண்டு 3,882 பேர் மட்டுமே 200-க்கு 200 எடுத்திருந்தனர். கணிதத்தில் அதிக பேர் நிறைய மதிப்பெண்கள்
எடுத்திருக்கிறார்கள். எனவே என்ஜினீயரிங் ‘கட்-ஆப்’ 0.5 மட்டுமே அதிகரிக்க குறைய வாய்ப்புள்ளது.
இந்த தகவலை
கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.