வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தமிழை முதல் மொழிப்பாடமாக கட்டாயமாக பயில வேண்டும்" என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் முதல் மொழிப்பாடமாக தமிழை கட்டாயமாக பயில வேண்டும் என தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006ல் வலியுறுத்தப்பட்டது.
இதன்படி 2006-07ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் துவங்கி அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழை கட்டாய முதல் மொழிப்பாடமாக கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2006-07ல் முதல் வகுப்பு பயின்ற மாணவர்கள் 201516ல் (வரும் கல்வியாண்டில்) 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இவர்கள் தமிழை முதல் மொழிப்பாடமாக கட்டாயமாக படிக்க வேண்டும். சிறுபான்மை மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் பயிலும் அனைத்து வகைப்பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி தனிக்கவனம் செலுத்த தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.
ஏனைய மொழியை பயின்றுவந்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில் முதல்மொழிப்பாடமாக தமிழில் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்படின், அதற்கான முழுப்பொறுப்பும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், தாளாளரையே சாரும். இதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், "வரும் கல்வியாண்டில் 10ம் வகுப்பில் முதல் மொழிப்பாடமாக தமிழை பயில்பவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும்.
முதல் மொழிப்பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்டவற்றை படித்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து, அவர்களையும் தமிழுக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக்., பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.