WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 20, 2015

நாளை 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு

தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை (மே 21) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் இலவசமாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பம் 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

தாற்காலிகச் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியரிடம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள் ஜூன் 4-ஆம் தேதி முதல் இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில்...



 

சிறப்பு துணைத் தேர்வு

பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்தத் தேர்வுக்கு மே 22 முதல் 27-ஆம் தேதி வரை பள்ளிகள் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ. 125. பதிவுக் கட்டணம் ரூ. 50.

கால அட்டவணை

ஜூன் 26 வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் 
முதல் தாள்
ஜூன் 27 சனிக்கிழமை மொழிப்பாடம் 
இரண்டாம் தாள்
ஜூன் 29 திங்கள்கிழமை ஆங்கிலம் 
முதல் தாள்
ஜூன் 30 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் 
இரண்டாம் தாள்
ஜூலை 1 புதன்கிழமை கணிதம்
ஜூலை 2 வியாழக்கிழமை அறிவியல்
ஜூலை 3 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.