WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

2ஜி, 3ஜி நெட் சேவைக்கு பிஎஸ்என்எல் புதிய சலுகை

பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி நெட் சேவை பயன்படுத்துவோர் தாங்கள்
பயன்படுத்தாத டேட்டாக்களை அடுத்த ரீசார்ஜில் சேர்த்துக் கொள்ளும் முறையை பி.எஸ்.என்.எல் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல் நுகர்வோர் துறை இயக்குநர் என்.கே. குப்தா கூறுகையில், பி.எஸ்.என்.எல் ப்ரீ பெய்ட் கார்டு மூலம் 2ஜி மற்றும் 3ஜி இணைய சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சேவை காலம் முடிந்த பின்பு, மீதம் இருக்கும் டேட்டாக்களை அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். 

இந்த முறை கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க மீண்டும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.