WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 6, 2015

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 8-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 14-ந் தேதி கடைசி நாள்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும் 8-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 14-ந் தேதி கடைசி நாள்.

மறுமதிப்பீடு

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங் கள் மூலமாகவும் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டுஅதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்

மொழிப்பாடங்களுக்கு தலா ரூ.550

ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275,

மறுகூட்டல் கட்டணம் பகுதி- 1 மொழி, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305,

ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல்

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் இயலும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 6 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.