அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகத்தில் உதவியாளராக பணிபுரிய ஆட்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அதற்காக விண்ணப்பித்து வருகிறார்கள். நேற்றுவரை 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் போது, விண்ணப்பிப்போரின் வேலை வாய்ப்பு பதிவு எண் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டாமென்றும், அவர்கள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது வேலை வாய்ப்பு பதிவு எண்ணை சமர்ப்பித்தால் போதும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.