WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 6, 2015

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்கள்:

 



ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.