WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 14, 2015

பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்

பிளஸ் 2 தேர்வில், 78,722 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வுக்குப் பதிவு செய்து, பல காரணங்களால் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் இறுதி வாரத்தில் நடக்க உள்ளது. இதற்கான பதிவு, நாளை துவங்கி, 20ம் தேதி முடிகிறது. பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும், எந்தப் பாடத்துக்கு தேர்வு எழுத வேண்டும் என, பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம், 50 ரூபாய்; ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய்; இதர கட்டணம், 35 ரூபாய் ரொக்கமாக செலுத்த வேண்டும் என, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.