WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 14, 2015

டி.இ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு

மாவட்டக் கல்வி அதிகாரி - டி.இ.ஓ., பதவிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன; மெயின் தேர்வு, ஆக., 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. கல்வித் துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலி இடங்களை நிரப்ப, 2014 ஜூன் 8ம் தேதி, முதல்நிலை எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவு, கடந்த பிப்ரவரியில் வெளியாவதாக இருந்தது; பல காரணங்களால் தள்ளிப் போனது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இதில், 3,127 பேர் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்; மெயின் தேர்வு ஆக., 6, 7 மற்றும் 8ம் தேதி நடக்கிறது. கூடுதல் விவரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.