WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 15, 2015

பிளஸ் 2: சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

                      



பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 15 முதல் 20-ஆம் தேதி வரை தங்களது பெயரைப் பதிவு செய்யலாம். ஜூன் மாத இறுதியில் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்யலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.

சிறப்புத் துணைத் தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதரக் கட்டணமாக ரூ.35-ம், பதிவுக் கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.