WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 15, 2015

விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வுசெய்ய முடியாமல் பரிதவிக்கும் மாணவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், கலை, அறிவியல் கல்லுாரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய முடியாமல் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் தொடர்கிறது.

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உயர்கல்வி சேர்க்கையில் தொடரும் முரண்பாடுகள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

மாநில அளவில், இப்பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்வை, 16 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். கோவை மாவட்டத்தில், 92 சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், மேல்நிலை வகுப்புகளை கொண்ட 16 பள்ளிகளை சேர்ந்த 400 பேர் தேர்வெழுதியுள்ளனர்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கலை அறிவியல் கல்லுாரிகளில் 7ம் தேதி முதலே மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இன்றைய தேதியில், 90 சதவீத கலை அறிவியல் கல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் அனைத்திலும், மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது.

இச்சூழலில், வரும் 25ம் தேதிக்கு பிறகே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. நல்ல மதிப்பெண்ணுடன் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பினும், இயற்பியல், வேதியியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கில இலக்கியம், பி.காம்.,- சி.ஏ., பி.பி.எம்., பி.எஸ்.டபிள்யூ., உட்பட முக்கிய பாடப்பிரிவுகளில், விரும்பிய கல்லுாரிகளில் இடம் கிடைப்பது என்பது சிரமம்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, மத்திய, மாநில அரசுகள் தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி அறங்காவலர் மோகன்தாஸ் கூறுகையில், "பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு பிரச்னைகள் இல்லை.

ஆனால், மாநில பாடத்திட்டத்தில், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடுவதால், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர்கள் விரும்பிய துறைகளில் சேர முடிவதில்லை. இதுகுறித்து, நடவடிக்கை மேற்கொள்ள, மத்திய போர்டுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மாவட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகள் இதுகுறித்து, கவனம் செலுத்தவேண்டியது அவசியம்" என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.