மார்ச் 5 ஆம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி
முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் சென்னையில் வெளியிட்டார்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவையை நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.
தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இடம்:
1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட விக்னேஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீண், திருச்சியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
மூன்றாம் இடம்:
நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
பாட வாரியாக சதம் எடுத்த மாணவர்கள்:
தமிழ் - 229
இயற்பியல் - 124
வேதியியல் - 1049
கணிதம் - 9710
தாவரவியல் - 75
விலங்கியல் - 4
கணினி அறிவியல் - 577
உயிரியல் 387
விலங்கியல் - 4,
புள்ளியியல் - 47,
வரலாறு - 31,
பொருளாதாரம் - 179, காமர்ஸ் - 819,
வணிகவியல் - 5167,
வணியியல் கணிதம் - 1036.
தமிழை மொழிப்பாடமாக எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் விபரம் :
பவித்ரா 1192 - விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.
நிவேதா 1192 - ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை.
விக்னேஸ்வரன் 1190 - ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு
பிரவீன் 1190 - எஸ்.கே.வி., மேல் நிலைப்பள்ளி, நாமக்கல்
சரண்ராம் 1190 - எஸ்.எஸ்.எம்., லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்
வித்யாவர்ஷினி 1190 - சவுடாம்பிகா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி
பாரதி 1189 - டிரைனிட் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்
தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.67%
மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%
பிளஸ் 2 தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6 சதவிகிதம் கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரஞ்சு மொழி பாடப்பிரிவில் முதலிடம்:
பிறமொழி பாடப் பிரிவில் மாநில அளவில் வேலம்மாள் பள்ளி, திருவள்ளூர் மாணவி ஸ்ரீ நிஷா 1194 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். இவர் பிரஞ்சு மொழியை பாடமாக எடுத்து படித்தார். மதுரை மாணவி பார்வதி 1193 மதிபெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மகாலட்சுமி 1194 (சமஸ்கிருதம்) - டி.ஏ.வி., மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை
பார்வதி 1193 (பிரெஞ்ச்) - ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை
ப்ரீத்தி 1193 (பிரெஞ்ச்) - கிளன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்
ரத்னா சுதாகர் 1192 (பிரெஞ்ச்) - கிளன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்
ராதேஷ் 1192 (சமஸ்கிருதம்) - பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம், காஞ்சிபுரம்
கடலூர் மதுரை மாவட்டம் 64.69 சதவீதம் தேர்ச்சி
கடலூர் மாவட்டத்தில் 64.69 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவர் சர்வேஷ் 1187 பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மதுரை மாவட்டத்தில் 92.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். செயின்ட் ஜோசப் பள்ளியை சேர்ந்த அக்ஷ்யா என்ற மாணவி 1200க்கு 1184 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தை சிஇஓ., பள்ளியை சேர்ந்த மாணவர் ஜோதி சரண் 1200க்கு 1183 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் 83.08 சதவீதம் தேர்ச்சி:
திருவாரூர் மாவட்டத்தில் 83.08 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 815 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட அளவில் மேல்மறவக்காடு தேவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஆர். உமாமகேஸ்வரி 1180 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி வி.லட்சுமி 1178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மன்னார்குடி துய வளனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி அரசன் குமாரி 1177 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 2 அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளி ஒன்றும் 11 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன.
தர்மபுரி மாவட்டம் 92.31 சதவீதம் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில், தேர்வு எழுதிய 20,514 மாணவர்களில் 18,936 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 92.31 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் 94.66 சதவீதம் தேர்ச்சி
இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சினிமா பின்னணி பாடகியான ஸ்ருதி 1200க்கு 1172 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். சினிமா பின்னணி பாடகியான இவர் இதுவரை வெளிவந்த 3 படங்களின் பாடல்களுக்கு பின்னணி பாடி உள்ளார். மேலும் 7 படங்களில் பின்னணி பாடி வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் முதலிடம்:
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம் விவரங்கள்:
விருதுநகர் - 97.46
பெரம்பலூர் - 97.25
ஈரோடு - 96.06
நாமக்கல் - 95.75
தூத்துக்குடி - 95.5
திருச்சி - 95.36
கன்னியாகுமரி- 95.21
ராமநாதபுரம் - 94.66
கோயம்புத்தூர்- 94.36
திருப்பூர் - 94.31
சிவகங்கை - 94.17
திருநெல்வேலி- 93.91
தேனி - 93.8
மதுரை - 92.87
தர்மபுரி - 92.31
கரூர் - 91.71
சென்னை - 91.54
சேலம் - 90.69
காஞ்சீபுரம் - 90.68
தஞ்சாவூர் - 90.26
திண்டுக்கல் - 90.22
புதுக்கோட்டை- 89.56
புதுச்சேரி - 88.15
திருவள்ளூர் - 87.32
ஊட்டி - 86.74
கிருஷ்ணகிரி - 86.48
நாகப்பட்டினம்- 86.45
கடலூர் - 84.69
விழுப்புரம் - 83.96
திருவண்ணாமலை - 83.43
திருவாரூர் - 83.08
வேலூர் - 81.39
அரியலூர் - 80.92
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.