தமிழகத்தில் ஜூன் 5 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள குரூப் 1 பிரதானத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 முதன்மைத் தேர்வு (Main Written Examination) ஜூன் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ விளக்கம் பெறலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.