WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 1, 2015

தோட்டக்கலை அலுவலர் பதவிடி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்' வெளியீடு

தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:வேளாண் பணிக்கான தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான 183 காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 2014 மார்ச் 16ல் நடந்தது. அதில், 659 தேர்வர்கள் பங்கேற்றனர். விதிகளைப் பின்பற்றி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட, 605 பேர்களில் இருந்து நேர்காணல் தேர்விற்கு, தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 361 பேரின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய வலைதளம், www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு ஜூன் 1 முதல் 4ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.