ஆரம்பப்பள்ளியில் தாய்மொழிக் கல்விக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்
என்று மத்திய நகர்ப்புற வளச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
பெங்களூரு வெள்ளிக்கிழமை பீன்யா தொழிற்பேட்டையில் இருந்து நாகசந்திரா வரையிலான 2.5 கி.மீ மெட்ரோ ரயில் பாதையில், சேவையை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
கர்நாடகத்தில் ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவு சரியாகவே உள்ளது. இதனை மத்திய அரசு ஆதரிக்கும். தேசிய அள்வில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அதன் தாய்மொழியில் ஆரம்பப்பள்ளிகளில் கல்வி கொண்டு வர வேண்டும் என்பது நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. இதனை செயல்படுத்தவும் பிரதமர் நரேந்திரமோடி உறுதியாக உள்ளார். எனவே இது தொடர்பான மசோதாவை விரைவில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பெங்களூருவில் மெட்ரோ ரயில் முதல்கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெற உள்ளது. இதேபோல் நாக்பூர், அகமதாபாத், லக்னெü, புணே, விஜயவாடா உள்ளிட்ட 9 நகரங்களில் 223 கி.மீ மெட்ரோ ரயில் பாதை அமைக்க கோரிக்கை வந்துள்ளது. அதனை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். தேசிய அளவில் 100 சிறப்பு நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த பல நகரங்கள் சேர உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 500 நகரங்களுக்கும் சிறப்பு வசதிகள் செய்துத்தரப்படும். தேசிய வளர்ச்சியில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கர்நாடகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்துத்தர தயாராக உள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.