நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.
தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்தில் 13 மாவட்டங்கள் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும், குஜராத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆந்திர மாநிலத்துலும் நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தம்
நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடுக்கிவிட்டுள்ளார்.
நேபாளத்தில் மையம்:
சரியாக செவ்வாய்க்கிழமை மதியம் 12.35 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
மேலும், நேபாளத் தலைநகர் காத்மாண்டு அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். அதன் தாக்கமே வடமாநிலங்களில் நில அதிர்வை ஏற்படுத்தியிருப்பதகாவும் தெரிவித்துள்ளது.
ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இருந்ததாகவும். காத்மாண்டுவில் இருந்து 83 கி.மீ. தூரத்தில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிந்துபால் சவுக் பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 12 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12-க்கும் மேற்பட்டோர் பலி:
நிலநடுக்கத்தில் சிக்கி 12-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என நேபாள தூதரக அதிகாரி கிருஷ்ண தகால் கூறியிருக்கிறார். பெருமளவில் பொருட் சேதமும் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக...
நேபாளத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் 6.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானிலும், 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உத்தரவு:
நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
ராஜ்நாத் தகவல்:
நில அதிர்வுகளால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் திரட்டப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 8,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.