WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 16, 2015

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவதற்கு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கருணை பணி 

சென்னை ஐகோர்ட்டில், வி.பாபு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘அரசு பணியில் இருந்து என் தந்தை இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வாகன பராமரிப்பு துறையில் கருணை அடிப்படையில் எனக்கு காவலாளி பணி 2008-ம் ஆண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேரும்போது, 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று இருந்தேன். எனவே, கல்வி தகுதியின் அடிப்படையில், எனக்கு இளநிலை உதவியாளர் பதவி வழங்கவேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை அவர் நிராகரித்து விட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்து, எனக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

ஏற்க முடியாது 

அதேபோல, சி.ஆர்.முருகன் என்பவரும் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், ‘என் தந்தை பணியில் இருக்கும்போது மரணமடைந்ததை தொடர்ந்து, வேலூரில் உள்ள அரசு போக்குவரத்து பராமரிப்பு பணிமனையில் துப்புரவு பணியாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. நான் பணியில் சேரும்போது 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளதால், எனக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த மனுக்களையும் விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

மனுதாரர்கள் இருவரும் கருணை அடிப்படையில் பணியில் சேரும்போது, முறையே காவலாளி, துப்புரவு பணியாளர் பணிகளை விரும்பி பெற்றதாகவும், இப்போது இளநிலை உதவியாளர் பணி கேட்பதை ஏற்க முடியாது என்று போக்குவரத்து துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உரிமை உள்ளது 

இந்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு கூறும் இந்த காரணத்தை ஏற்க முடியாது. விருப்பத்தின் அடிப்படையில் காவலாளியாகவும், துப்புரவு தொழிலாளியாகவும் பணியில் சேர்ந்து இருந்தாலும், கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் பணி பெற மனுதாரர்களுக்கு தகுதியும், உரிமையும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, மனுதாரர்களை அப்பதவிக்கு நியமிக்கலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.