WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 29, 2015

கல்லூரியில் இடம் கிடைக்காமல் கண்ணீர் மல்க வெளியேறிய மாணவியர்

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவியருக்கென, 30 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களை காட்டிலும் அதிகளவில் (65 சதவீதம்) விண்ணப்பித்த மாணவியர், இடம் கிடைக்காமல் கண்ணீர் மல்க வெளியேறும் பரிதாபம் தொடர்கிறது.

கோவை அரசு கலைக் கல்லுரியில், 21 படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், நடப்பு, 2015 - 16ம் கல்வியாண்டு, இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த, 25ம் தேதி முதல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள, 1,359 இடங்களுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த, 12 ஆயிரத்து 402 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 70 சதவீதம் மாணவர்களுக்கும், 30 சதவீதம் மாணவியருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது. அதன்படி, மாணவியருக்கான, 400 இடங்களுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு, 6,500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.

தற்போது நடந்து வரும் கலந்தாய்வில், சொற்ப இடங்களே மாணவியருக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், நாள்தோறும் இடம் கிடைக்காத ஏக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவியர் கண்ணீர் மல்க வெளியேறுவது சோகத்தை உருவாக்குகிறது.எனவே, மகளிருக்கென தனி அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் அல்லது, இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், என்பது பெற்றோர், மாணவியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கல்லூரி முதல்வர் குமரேசன் கூறுகையில், ”இவ்வாண்டு, மாணவர்களை காட்டிலும், மாணவியரே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், மாணவியருக்கென அரசு ஒதுக்கிய, 30 சதவீத இடஒதுக்கீடே வழங்க முடியும்,” என்றார்.

தனி மகளிர் கல்லூரி தேவை!

தமிழ்நாடு அரசுக் கல்லூரிகள் ஆசிரியர் சங்க (கிளை) தலைவர் வீரமணி கூறுகையில், ”கடந்த, நான்கு ஆண்டுகளாக, கோவையில் மகளிருக்கென தனி அரசுக் கலைக் கல்லூரி கேட்டு வருகிறோம். மாணவியருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு கூட இல்லை. எனவே, இடம் கிடைக்காத மாணவியர் பொருளாதார பிரச்னையால் வேறு கல்லூரிகளுக்கு செல்வதில்லை; பட்டதாரி கனவும் பாழாகிறது. எனவே, மகளிருக்கென தனி அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.