WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 11, 2015

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் முதல் கட்ட கலந்தாய்வு.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16)
மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார். சிறப்புப் பிரிவினருக்கு விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ராணு வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு வரும் 19-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினர் உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். வரும் 25-ஆம் தேதியன்று முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடையும். 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.  சென்னை தாகூர், கோவை-பி.எஸ்.ஜி., கோவை-கற்பகம், ஈரோடு ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எஸ்ஆர்எம் குழுமம்), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் கற்பக விநாயகா, உள்ளிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். சென்னை இஎஸ்ஐ நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின் எதிர்கால இறுதித் தீர்ப்புக்கு மாணவர் சேர்க்கை கட்டுப்பட வேண்டும் என்பதால், ஏற்கெனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி முதல் கட்ட கலந்தாய்வில் இடம்பெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.