WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 7, 2015

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : ஜூன் 3வது வாரத்தில் பி.எட். தேர்வு முடிவு

தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன் 3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 670 பிஎட் கல்லூரிகள் செயல்படுகின்றன. பிஎட் தேர்வுகள் கடந்த மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மே 25ம் தேதி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 இடங்களில் நடந்தது. 

விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும் என தெரிகிறது. எனவே பிஎட் தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.