WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 16, 2015

அரசு பள்ளியில் "பிரேயர்'க்கு தாமதம்7 ஆசிரியருக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை.

திருவண்ணாமலை:செங்கம் அரசு
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏழு பேர், நேற்று காலை பள்ளியின் இறைவணக்கம் நேரத்திற்கு தாமதமாக வந்ததால், சி.இ.ஓ., பொன்குமார், அவர்களை கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவர் படித்து வருகின்றனர். இங்கு, 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார், இப்பள்ளியில், இறைவணக்கம் (பிரேயர்) துவங்குவதற்கு முன்பு, திடீர் ஆய்வுக்கு சென்றார். அப்போது, பள்ளி ஆசிரியர் ஏழு பேர், தாமதமாக பள்ளிக்கு வந்தனர். அதிர்ச்சியடைந்த சி.இ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலையில், தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களையும் எச்சரித்தார். "வரும் காலங்களில் காலதாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறினார். இச்சம்பவம், திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் மத்தியில், கலகத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து, சி.இ.ஓ., பொன்குமார் கூறியதாவது:செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது, அப்போது, பள்ளியில் இறைவணக்கம் துவங்கிய பின்னரும், ஏழு ஆசிரியர்கள் காலதாமதமாக வந்தனர். வாரத்தின் முதல் நாளில், தாமதமாக வந்ததால், எச்சரிக்கை விடப்பட்டது, இனி, வரும் காலங்களில் காலதாமதமாக வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.