சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை தமிழ் பயின்ற மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழியல்துறைத் தலைவர் அரங்க.பாரி வேண்டும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான வளாக நேர்காணல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் ஜூன் 15,16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் பட்டம் பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். அண்ணாமலைப் பல்கலையில் நடைபெறும் வளாக நேர்காணலுக்கு சிங்கப்பூர் எஜூகேர் (Educare) நிறுவனத்திலிருந்து நான்கு பேர் கொண்ட குழு வருகை தரவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் படித்த மாணவ, மாணவியர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம் என அரங்க.பாரி தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களை 94880 13050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.