பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள்
பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி
அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.