தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே விலை இல்லா பாடப் புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சில தனியார் பள்ளிகள் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன.
விடுமுறை நாட்களில் சொந்த ஊர், உறவினர் ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்த மாணவ-மாணவிகள் நேற்று ஆர்வத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.
பெரும்பாலான மாணவ-மாணவிகள் பள்ளிக் கூட புதிய சீருடைகளை அணிந்து கொண்டும், புத்தகப் பை கொண்டும் சென்றனர்.
முதல் நாள் என்பதால் மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர் ஆசி வழங்கி பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக் கூடங்களுக்கு வழக்கமான பள்ளிக்கூட வேன்கள், ஆட்டோக்கள், பெற்றோருடன் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றில் சென்றனர்.
பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்
பள்ளிக்கூடம் சென்றதும் கடவுள் வாழ்த்து பாடலுடன் பிரார்த்தனை தொடங்கியது. பிரார்த்தனை முடிந்ததும் வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். உடனே அவர்களுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவுப்படி ஆசிரியர்கள் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார்கள். அவற்றை மகிழ்ச்சியுடன் மாணவ-மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மற்ற விலை இல்லா பொருட்களும் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.