ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பதை
வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மே மாதம் கவுன்சிலிங் நடந்தால், ஜூன் மாதத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர வசதியாக இருக்கும். ஆனால், ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படுவதால், ஆசிரியர்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் குடும்பத்துக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
எனவே, வரும் ஆண்டுகளில் மே மாதமே, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆசிரியர் கூட்டணியின் நகர செயலாளர் விக்டர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.