WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 22, 2015

மத்திய அரசு பள்ளிகளில் 'சுமையற்ற' கட்டாய பாடமாக யோகா.

                              டெல்லியில் நடைபெற்ற தேசிய யோகா பயிற்றுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி | படம்: பி.டி.ஐ.
 டெல்லியில் நடைபெற்ற தேசிய யோகா பயிற்றுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி
 | 
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய யோகா பயிற்றுநர்கள் மாநாட்டில் அவர் பேசும்போது, "நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மேலும், ஆசிரியர் பயிற்சி திட்டங்களிலும் யோகா பயிற்சி சேர்க்கப்படவுள்ளது.

யோகாவை கட்டாயமாக்குவதால் மாணவர்களுக்கு எவ்வகையிலும் சுமை ஏற்படாது. ஏனெனில் 80% மதிப்பெண் செயல்முறை தேர்வில் வழங்கப்பட்டுவிடும். யோகாவை மாணவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

யோகா பாடத்தில் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு (2016), டெல்லியில் தேசிய அளவிளான யோகா போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்" என்றார்.

மொபைல் ஆப்:

என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய புத்தக கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து புத்தகங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொபைல் செயலி வழியாக இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஸ்மிருதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.