WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 19, 2015

மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் நடவடிக்கை கோரி டி.இ.ஓ.,விடம் மனு.

திண்டிவனத்தில், மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை
கோரி, டி.இ.ஓ.,விடம் மனு கொடுக்கப்பட்டது.திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடியை சேர்ந் தவர் ஏகநாதன். இவரது மகன் முரளிதரன், 13; திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் உள்ள, புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி, வகுப்பில் பேசியதாக கூறி, ஆசிரியர் வேளாங்கண்ணி, முரளிதரனை பிரம்பால் அடித்துள்ளார்.இதில், அவரது தோள்பட்டையில் ரத்த கட்டுடன் வீக்கம் ஏற்பட்டது.நேற்று காலை, ஏகநாதன் தனது மகன் முரளிதர னுடன் சென்று, திண்டிவனம் டி.இ.ஓ., பாஸ்கரனை சந்தித்து, மாணவரை முரட்டுத்தனமாக தாக்கிய ஆசிரியர் வேளாங்கண்ணி மீது நடவடிக்கை எடுக்கு மாறு மனு கொடுத்தார்.முரளிதரனுக்கு திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.