WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 30, 2015

வேறு பணிக்கு நியமிக்கக் கூடாது; பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.

கற்பித்தல் பணியை தவிர, வேறு பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக்
கூடாது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், பாண்டியன், பரிமேலழகன், தண்டாயுதபாணி, தமிழ்குமரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் துரைசாமி வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில பொதுச் செயலா ளர் சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற டி.இ.ஓ., கோலக்காரன், முன்னாள் மாவட்டத் தலைவர் அன்பழகன் ஆகியோர் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும், தேர்வு மதிப்பீடு பணிக்கான உழைப்பூதியத்தை, இரு மடங்காக உயர்த்த வேண்டும், கற்றல், கற்பித்தல் பணிகளை தவிர்த்து பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் கூடாது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட அமைப்பு செயலாளர் விஸ்வலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.