WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 9, 2015

போலிச் சான்றிதழ்: தில்லி சட்டத்துறை அமைச்சர் கைது.

தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டோமர் போலி பட்டப் படிப்பு
சான்றிதழ் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆம் ஆத்மி கட்சியின் சட்டத்துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் டோமர் சட்டம் பயிலாமலேயே, சட்டப் படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது. அதன் பிறகு, பிகார் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புக்கான பட்டம் பெற்றதாக ஜிதேந்திர சிங், போலி சான்றிதழ் வைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிகார் பல்கலைக்கழகம், தங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் பட்டம் பெறவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது. ஜிதேந்திர சிங் வைத்துள்ளது போலி சான்றிதழ் என்று கூறியுள்ள பல்கலைக்கழகம், அவரின் பட்டச் சான்றிதழில் காணப்படும் வரிசை எண் வேறொரு நபருக்கு சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று நடைபெற்ற விசாரணையில் தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டோமர் போலியான பட்டப் படிப்பு சான்றிதழ் கொடுத்தது நிரூபிக்கப்பட்டது. அதன்படி, தில்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.