WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 15, 2015

பிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை பதிவு செய்ய
ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயமில்லை,”என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இன்று முதல் 29ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே அவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்கள் 10ம் வகுப்பு வேலைவாய்ப்பக பதிவு அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது ஆதார் அட்டை இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“பிளஸ் 2 கல்வித்தகுதி பதிவுக்காக வரும்போது மாணவர்களின் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான புகைப்படம் எடுக்க அறிவுரை கூறி கல்வித்தகுதியை பதிவு செய்துதரவேண்டும். இதில் சர்ச்சை கூடாது,”என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.