பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்
நேற்று மதியம், 12:00 மணியளவில் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்ததேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் மற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு, 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் இணையதள பதிவுக் கட்டணமாக, 50 ரூபாயை கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகல் பெறுபவர்கள், மொழிபாடங்களுக்கு தலா, 550 ரூபாயும், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 275 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு மொழி பாடங்களுக்கும், உயிரியல் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 305 ரூபாயும், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.