WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 14, 2015

பூமி தண்ணீர் உலகமாக மாறும்- ஆராய்ச்சியாளர்கள்.

பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக
மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன் ஆண்டுகளில், பூமி முழுவதும் மீண்டும் தண்ணீரால் சூழப்படும் எனவும் தெரியவந்துள்ளது. சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது. அதன் பின் அதன் தடிமன் குறைந்தபடியே உள்ளதாகவும், கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.