WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 26, 2015

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி, பள்ளி நிர்வாகிகள்
சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியது: தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகளுக்கு மே 31-ஆம் தேதியுடன் அங்கீகாரம் நிறைவடைந்துவிட்டது. அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடல் பிரிவிலிருந்து சான்றிதழ் வேண்டும் என்கிற காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே, தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதோடு, அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் காலத்தை 3 ஆண்டுகளுக்குப் பதில் 5 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.