WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 12, 2015

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பருக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தக்குமார் கூறியதாவது: 'டெட்' தேர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயம் என்றால் அவர்கள் 'டெட்' தேர்வை முடித்து விட்டு அரசு பள்ளிகளுக்கு சென்று விடுவர். இதனால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். தனியார் பள்ளிகள் மீண்டும் புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கான 97 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும்; விரைவில் அங்கீகாரம் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பள்ளி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.