WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 27, 2015

சுகாதார பணிக்கு எஸ்.எஸ்.ஏ., நிதி:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.

பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே பயன்
படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி மானியம், 25 ஆயிரம், பராமரிப்பு நிதி, 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு பிரித்து தரப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்தி, பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், சேதமடைந்த வகுப்பறையை புதுப்பித்தல், கூடுதல் கட்டடம் கட்டுதல், கழிப்பிடம் கட்டுதல் போன்ற வசதிகளை செய்துகொள்ளலாம். இம்முறை, பள்ளிகளுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.ஏ., நிதியை முழுமையாக, சுகாதார பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய கழிப்பிடம், கூடுதல் கழிப்பிடங்கள் கட்டுதல், பழுதடைந்த கழிப்பிடங்களை புதுப்பித்தல், மாணவ, மாணவியருக்கு என தனித்தனியாக கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், சுத்தமாக பராமரித்தல், "செப்டிக் டேங்க்' அமைத்தல் போன்ற பணிகளுக்கு மட்டுமே, இந்நிதியை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.