திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகிய பதவிகளுக்கு வரும், 29ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு, மாவட்டம் கோரும் மாறுதல்கள் வரும், 30ம் தேதி நடக்க உள்ளது.காலை, 10 மணிக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் மாறுதல் கோரி பதிவு செய்யப்பட்ட பதவிகளுக்கு மட்டும் ஆதிதிராவிடர் நல இயக்குனரின் நேரடி பார்வையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முன்னிலையில் அவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.