மாணவர்களின் மனரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கடந்த
கல்வியாண்டில் செயல்படுத்தப்பட்ட, 'கவுன்சிலிங் பாக்ஸ்' திட்டம் அதிகாரிகளின் அலட்சியத்தால், முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு, ஜூலை மாதம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கற்றல் குறைபாடு, வளர் இளம் பருவம் உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, கவுன்சிலிங் அளிக்கும் நோக்கில், ' கவுன்சிலிங் பாக்ஸ் ' திட்டம் செயல்படுத்தப்பட்டது.முதல்கட்டமாக மாவட்டந்தோறும், 15 பள்ளிகள் வீதம், 480 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 'கவுன்சிலிங் பாக்ஸ்' அமைக்கப்பட்டது. மேலும், நடமாடும் உளவியல் மைய நிபுணர்களுக்கும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், நிபுணர் குழு வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், கவுன்சிலிங் பாக்ஸ் அமைக்கப்படவேண்டும். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கற்றலில் உள்ள குறைபாடுகள், மனரீதியான பிரச்னைகள், வளர் இளம் பருவ பாதிப்புகள், குடும்ப பிரச்னைகள் போன்றவற்றை எழுதி போட அறிவுறுத்தப்பட்டது.இதில், மாணவர்களின் தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தவிர பிறருக்கு தெரியாமல் ரகசியமாக வைக்கப்படும் என்பதை மாணவர்களிடம் தெளிவுபடுத்தவேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் கவுன்சிலிங் பாக்ஸில் பெறப்படும் கடிதங்களை சேகரித்து, பிரச்னை உள்ள மாணவரை தனிப்பட்ட முறை யில் அழைத்து கவுன்சிலிங் வழங்க போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இருப்பினும், இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தாமலேயே பாதியில் அலட்சியத்தால் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் மனரீதியான பிரச்னைகளுக்கு பல்வேறு திட்டங்களை வகுக்கும் கல்வித்துறை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் விடுவதே, தற்போது மாணவர் கள் மத்தியில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களுக்கும், ஒழுக்கமற்ற செயல்களுக்கும் முதல்காரணமாக அமைந்துள்ளது. பயிற்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ' இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரச்னை மிக்க மாணவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்தலாம். பல லட்சம் செலவழித்து பயிற்சிகள் வழங்கினார்கள். ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், மாணவர்களை எளிதாக நல்வழிப்படுத்த இயலும். என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.