WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 24, 2015

பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்.

விழுப்புரம்:இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,
விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ஷேக்ஜாகீர் உசேன், மாநில துணை தலைவர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சம்சுதீன் வரவேற்றார். மாநில செயலாளர் ரகீம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் சீனுவாசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினர்.மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பதை மாற்றிட வேண்டும்.கல்வி துறையில் அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆசி ரியர்கள், கோஷமிட்டனர். இடைநிலை ஆசி ரியர் சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.