'ஒரு இடத்தில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே, பொது பணியிட
மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம், நேற்று, சேலத்தில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மாநில பொதுச் செயலர் கோவிந்தன் பேசியதாவது: ஆசிரியர் பொது மாறுதல் குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், 'மூன்று ஆண்டுகள், ஒரே பள்ளியில் பணிபுரிந்திருந்தால் மட்டுமே, கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளில், ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள், பணி நிரவல் மூலம் வேறு மாவட்டங்களுக்கு, கட்டாய மாறுதல் செய்யப்பட்டவர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகள் நிபந்தனையை நீக்கி, கடந்த ஆண்டில் இருந்தது போல், ஓராண்டு பணிபுரிந்தவர்கள், கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில், தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.