மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ்
தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர்.
சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும் வந்தனா ராவ் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். சுஹர்ஷா பட் என்பவர் ஐந்தாவது இடத்தை பிடித்து ஆண்களுக்கு ஆறுதல் அளித்தார். நேர்முக தேர்வு மற்றும் தனித்திறமை ஆகிய தேர்வுகள் முடிந்த நான்கு நாட்களுக்கு முதன்முறையான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதில் ரேணு ராஜ் கேரளாவை சேர்ந்த மருத்துவராவார். தனது முதல் முயற்சியிலேயே 2வது இடத்தை பிடித்து ரேணு சாதனை படைத்துள்ளார். தனது இந்த சாதனைக்கு குடும்பத்தினரும், நலம் விரும்பிகளும் தான் காரணம் என ரேணு கூறியுள்ளார்.
1364 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.