மத்திய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் பணிபுரிவதற்கான,
ஆசிரியர் தகுதி தேர்வு (சி.டி.இ.டி.,), செப்., 20ம் தேதி நடக்கவுள்ளதாக மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.மாநில அரசு சார்பில், 'டெட்' தேர்வு நடைபெறுவது போல், மத்திய கல்வி வாரியம் சார்பில், சி.டி.இ.டி., தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில், பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், ஆக., 19ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான, தேர்வுகள் செப்., 20ம் தேதி நடக்கிறது. முதல்தாள் எழுத பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண்களும், 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய படிப்பும் முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்பில், 50 சதவீத மதிப்பெண்களும், பி.எட்., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.மேலும், ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத தேர்வு கட்டணம், 600 ரூபாயும், இரண்டு தாள்களையும் சேர்த்து எழுத, 1,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத, 300 ரூபாயும், இரண்டு தாள்களையும் எழுத, 500 ரூபாயும் செலுத்த வேண்டும். இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், முழுமையான விபரங்களை தெரிந்துகொள்ளவும், www.ctet.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.