WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 24, 2015

மாணவர்களுக்கு ஆதார் முகாம்; பள்ளிகளில் நடத்த கல்வித்துறை ஏற்பாடு.

                                           


தமிழகம் முழுவதும், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை எடுப்பதற்கான முகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும், அனைத்து வகை அரசுத் திட்டங்களுக்கும், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் மாணவ,மாணவியரின் கல்வி உதவித் தொகை மற்றும் இலவசத் திட்ட முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் எண்களை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆதார் எண் இணைப்புத் திட்ட தொடர்பு அதிகாரியாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது உத்தரவின்படி,மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

இவற்றில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் இல்லை என, தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும், 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆதார் எண் உருவாக்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பெங்களூரிலுள்ள ஆதார் எண் திட்ட உதவி இயக்குனரகத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைந்து, முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.