ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர் களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து
வருகிறது. இதே நிலைமை தொடரும் பட்சத்தில் வரும் 2017-ம் ஆண்டில் அமெரிக் காவை விட இந்தியாவில் ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2015-ம் ஆண்டில் 150 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கும் என்றும் இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 170 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஸ்டாட்ரஜி அனல்டிக்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 2017-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் விளம்பர செயல்பாடுகள், நடுத்தர மக்களின் வருமானம், தவிர சந்தை படுத்துதல் ஆகிய காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிறுவனம் கணித்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் கணிப்புப்படி இந்த வருடம் மட்டும் 11.8 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியவில் விற்கப்படும் என்று கூறியிருக்கிறது. 2015-ம் ஆண்டு சீனாவில் 45.8 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படும் என்றும், 2017-ம் ஆண்டு 50.5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் 16.4 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்த வருடம் விற்கும் என்றும், 2017-ம் ஆண்டு 16.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.