WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 15, 2015

பள்ளியிலேயே இன்று முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று
வழங்கப்படும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவையும் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் (இருப்பின்), குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று கொண்டுவர வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 27-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது. இதன்படி, பதிவுப் பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.