WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 1, 2015

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல்
தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மே 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. இதையடுத்து, இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 21 வரை செல்லத்தக்கது. எனினும், மாணவர் நலன் கருதி மூல மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 10 மணி முதல் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.