WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 7, 2015

அரசு பள்ளிகளில் செப்., 30 வரைமாணவர்களை சேர்க்க அனுமதி.

பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து, சிறப்பு துணைத்தேர்வு எழுதிய
மாணவர்களின் வசதிக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஜூலை, 31ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடியும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, சமீபத்தில் தான் தேர்வு முடிவுகள் வந்தன. இதில் வெற்றி பெற்ற பலர், பிளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். அதனால், மாணவர் சேர்க்கை கால வரம்பு, செப்டம்பர், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.