WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 17, 2015

500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல்.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் இடமாறுதல் வழங்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 249 பேர் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளும், 171 பேர் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் பெற்றனர். சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வில் ஓவிய ஆசிரியர்கள் 32 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 15 பேருக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் 45 பேருக்கும், இடைநிலை ஆசிரியர்கள் 56 பேருக்கும், தையல் ஆசிரியர்கள் 9 பேருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் வழங்கப்பட்டது. அடுத்ததாக, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 450 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.