WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 28, 2015

பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல
விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது. திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள், இடை ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு, நாளை துவங்குகிறது. திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 29ல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி களில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்; 30ம் தேதி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பாடம் நடத்தும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் இக்கலந்தாய்வு, ஆன்-லைன் முறையில் நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, பிற மாவட்டங்களில் பணியாற்ற மொத்தம் 529 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.