WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 28, 2015

இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி.

பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்'
என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வின் இறுதிக் கட்டமாக, நேற்று முன்தினம் இந்த பணிநிரவல் கலந்தாய்வு துவங்கியது. ஆனால், 'இந்த பணி நிரவல் நடவடிக்கையில், தெளிவான அணுகுமுறை இல்லை. ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை, திடீரென ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளிக்கு மாற்றினால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். பிற மாவட்டங்களுக்கு, திடீரென ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்வதும் கடினம்' என, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.